Friday, December 14, 2012

Dec 15th Neethaane En Ponvasantham-Tamil movie Omaha



Latest movieNeethaane En Ponvasantham (Tamil) is screening in Omaha.


Starringing Jeeva, Samantha and Santhanam

Direction: Gautham Vasudev Menon
Music: Ilayaraja



Venue Douglas 20 Grand Cinema

14304 W Maple Road, Omaha, NE 68164

Date &TimeSunday, December 16th, 2012@3:00 PM

Tickets
Adults : $ 10 Kids 3-12 : $ 5 Kids under 3 are free
Seats are allotted based on reservation time.

Please make your reservations through
omahatamilmovie@yahoo.com or Call: Arul  (402)-758-0328

Tuesday, December 4, 2012

Pongal Celebration Jan 12th , 2013


The Tamizh Sangam is planning to have our Pongal Celebrations on Saturday January 12th, 2013.

Food:
Contact Sudha Sivamani at jayasudhaa@hotmail.com if you would like to provide/sponsor any food item for the event.

Cultural:
Contact Sriharish Rajakumar at 732-425-3745 or sriharishr@gmail.com if you would like to participate in the cultural programs.  Please note that any song/music requested will be reserved to the participant on a first-come-first-serve basis. Please respond on or before Dec 30th, 2012.

Audio System:
We are aware of audio system issues during Deepavali function. Cultural committee did their best to test the system before the event, but it did not work well in the end.  We understand how much effort each family spends to make our cultural programs standout, our sincere apologies to parents and performers for the audio system issues.

For the Pongal function we are planning to rent entire audio system including main controller, speakers and wireless mics. We are also working to reserve the same venue for rehearsal. Participants will be able to rehearse with the same audio system we are going to use during the main event.

AnbudanTamil Sangam.

Thursday, October 11, 2012

Maatran Tamil Movie- October 14th



Latest movie Maatran (Tamil) is screening in Omaha.

Starringing Surya and Kaajal Agarwal

Direction: K.V. Anand
Music: Harris Jayaraj



Venue Douglas 20 Grand Cinema

14304 W Maple Road, Omaha, NE 68164

Date &TimeSunday, October 14th, 2012@10:30 A.M

Tickets
Adults : $ 10 Kids 3-12 : $ 5 Kids under 3 are free
Seats are allotted based on reservation time.

Please make your reservations through
omahatamilmovie@yahoo.com or Call: Arul  (402)-758-0328

Thursday, September 27, 2012

Neethaane En Ponvasantham-Tamil movie December 15th


Latest movie Maatran (Tamil) is screening in Omaha.

Starringing Jeeva, Samantha and Santhanam

Direction: Gautham Vasudev Menon
Music: Ilayaraja



Venue : Douglas 20 Grand Cinema

14304 W Maple Road, Omaha, NE 68164

Date &Time: Sunday, December 16th, 2012@3:00 PM

Tickets
Adults : $ 10 Kids 3-12 : $ 5 Kids under 3 are free
Seats are allotted based on reservation time.

Please make your reservations through
omahatamilmovie@yahoo.com or Call: Arul  (402)-758-0328

Monday, July 23, 2012

Tamil Sangam Summer Outing 2012


Tamil Sangam is excited to invite you all to participate in 2012 Summer outing

Date Saturday, Sep 15
Time 3 p.m to 8 p.m
          28500 West Park Hwy
          Ashland,NE 68003

We are planning fun events for kids and adults. In order to organize the games based on gender and age group, we need to know how many people are attending from you family. Please
fill out the following survey by September 8th.



We will provide snacks, water and soft drinks. There is no fees for this event.  We will provider further directions on where to meet inside the park when we get closer to the event date.

There is park entrance fee which will be paid by the families, please visit the park website for details. We encourage car pooling as much as possible, so that we have enough space for parking closer to the event tent.

Anbudan
Tamil Sangam

 






Sunday, June 24, 2012

Today is Kannadasan's Birthday !!

An Article from 1965 which was published on Vikatan magazine about the great Tamil Poet Kannadasan..


To read more about Kannadasan visit http://kkalyan.tripod.com/kndsn.html/


''பஸ்ஸில் பிறந்தவன் இந்தக் கண்ணதாசன்!''




புதுக்கோட்டையிலிருந்து 'திருமகள்' என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.

அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார். எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா.

இப்போது அவர் பெயர் முத்தையா அல்ல; கண்ணதாசன்.

ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சிறுகூடல் பட்டியில், தந்தைக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித்தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.

''பள்ளிக்கூடத்தை விட்டவுடன் அஜாக்ஸ் ஒர்க்ஸில் 'டெஸ்பாட்சிங் பாயா'கப் பணியாற்றி வந்தேன். வாரம் ஐந்து ரூபாய் கூலி. என் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே எனக்கு எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். 'கிரகலட்சுமி' என்ற பத்திரிகையில் 'நிலவொளியிலே' என்ற தலைப்பில் எழுதிய கதைதான் என் முதல் கதை.

அஜாக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை பிடிக்காமல் விட்ட பிறகு, சில காலம் எந்த வேலையும் செய்யவில்லை நான். பட்டினத்தார் சமாதியில் போய் உட்கார்ந்திருப்பேன். அங்கேயேதான் தூக்கமும். அதன் பிறகுதான் திருமகள் பத்திரி கையின் ஆசிரியரானேன். ஆனால், அதிலும் ஓராண்டுக் காலம்தான் நீடித்தேன். பின்னர் சென்னைக்கு வந்து 'திரை ஒலி' என்ற பத்திரிகையில் சில காலம் இருந்தேன். அதன் பின், மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய 'சண்டமாருதம்' பத்திரிகைக்குப் போனேன். சண்டமாரு தம் சரியாக நடக்கவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய கதை இலாகாவில் என்னை எடுத்துக் கொண்டார்கள். இப்படித்தான் இலக்கிய உலகிலிருந்து சினிமா உலகுக்கு நான் வந்தேன்.''

இன்று தமிழ்நாட்டில் பிரபல கவிஞராக விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

''நீங்கள் முதன்முதலில் பாட்டு எழுதிய படம் எது?''

''டைரக்டர் ராம்நாத். அவர்தான் என்னை ஏற்றுக்கொண்டார். ஜூபிட ரின் 'கன்னியின் காதலி'யில் ஆறு பாட்டு என்னுடையது. 'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்பதுதான் என் முதல் பாட்டு!''

'கண்ணதாசன்' பஸ்ஸில் பிறந்தவர். ஆமாம்! திருமகள் பத்திரிகைக்குக் கடிதம் எடுத்துக்கொண்டு போகிறபோது, தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று புரியாமல் குழம்பினார் அவர்.

''வெறும் முத்தையா என்றால் மதிப்பிருக்காது என்று தோன்றியது. கவிஞன் என்பவனுக்கு ஒரு தனிப் பெயர், 'கவிதைப் பெயர்' தேவை என்று பட்டது. பஸ்ஸில் போகும் போது யோசித்தேன். எட்டாவது மகன் கண்ணன். நானும் எட்டாவது மகன். ஏன் கண்ணன் என்றே வைத்துக்கொள்ளக்கூடாது? அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா? அந்தக் காலத்தில் பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதிதாசன், கம்பதாசன்... அவ்வளவுதான்! கண்ண தாசன் பிறந்துவிட்டான்.''

கல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றுள்ள கண்ணதாசன், சிறைச்சாலையிலிருந்தே திரைப்படத்துக் குக் கதை எழுதித் தந்திருக் கிறார். அப்படி அவர் எழுதி வெளிவந்த படம் தான், 'இல்லற ஜோதி'.

1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டுமே இருந்த கவிஞர், 'தென்றல்' பத்திரிகை மூலம் தமிழ் மக்களுக்குப் பத்திரிகை ஆசிரியராக அறிமுகம் ஆனார்.

அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர், சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார். சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் 'மாலையிட்ட மங்கை' நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள்.

''இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி; இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்!'' என்கிறார் கண்ணதாசன்.

இவரே எழுதியதில் இவருக்கு மிகவும் பிடித்த சினிமாப்பாட்டு - 'போனால் போகட்டும் போடா!'

(விகடன் - 30.05.1965)

Monday, May 21, 2012

Kamarajar = Simplicity....


Another part of the Article about Kamarajar on Vikatan Magazine...


மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணமுடியும்' என்றார்!


ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமே சொல்லி விட்டு இறங்கினார்!



நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்

( காமராஜர் 25 - ப.திருமாவேலன் )

Thursday, May 17, 2012

Kamarajar - The King Maker!


Source - Vikatan Tamizh Weekly magazine...



காமராஜர் !


தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!



மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

( காமராஜர் 25 - ப.திருமாவேலன் )

Thursday, May 10, 2012

Dinamalar's News about our Tamil Sangam

Tamil Nadu's largest selling daily news paper "Dinamalar" has published the activity of our Tamil Sangam's New Year Celebration 2012.


Here's the link to the article 
http://www.dinamalar.com/nri/details.asp?id=6591&lang=ta

Sunday, April 22, 2012

Thank you !

The Chitthirai Thiruvizha was a Grand Success ! Thanks to all the participants, audience and volunteers for making this a great show. Hope everyone had a great time !!